கிருஷ்ணகிரி: அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அ.தி.மு.க., பொதுசெயலாளராக பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், அ.தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி, ஐந்துரோடு ரவுண்டானாவில் ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில், நேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், கவுன்சிலர் குபேரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
* தர்மபுரியிலுள்ள, அ.தி.மு.க., மாவட்ட அலுவலகம் முன் தர்மபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல் அரூரிலும் கட்சியினர் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.