கிருஷ்ணகிரி: லக்னோ, தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையம் இணைந்து, மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நாற்றுகள் உற்பத்தி செலவை குறைக்கும் வகையில், செண்டுமல்லி நாற்றுகளை, 50 ஏக்கர் பரப்பளவு மற்றும் மிரபல் ரோஸ் மலர் நாற்றுக்களை, 10 ஏக்கர் பரப்பளவிலும் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு, எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி தலைமை வகித்து பேசினார். தேசிய, தாவரவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விஜய் ஆனந்த்ராஜ், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மலர் வளர்ப்பு திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார். வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், மலர் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண் அறிவியல் மையத்தை அணுகி தீர்வு காண கேட்டுக் கொண்டார்.