தர்மபுரி: தர்மபுரியில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., மோகன் தலைமையில், ஏட்டுக்கள் வேணுகோபால், கோவிந்தன் ஆகியோர், கடந்த, 2015ல், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த, திருப்பத்துார் மாவட்டம், வேப்பல்நத்தத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 42 என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், வேப்பல்நத்தத்தில் பதுங்கியிருந்த அவரை, தர்மபுரி மாவட்ட மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.