வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் தகுதி நீக்கத்தை லோக்சபா செயலகம் ரத்து செய்தது.

லட்சத்தீவு தொகுதி எம்.பி., ஆக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். 2009 லோக்சபா தேர்தலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் பிஎம் சயீத் மருமகன் முகமது சலியா என்பவரை கொலை முயற்சி செய்ததாக முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் முகமது பைசல் குற்றவாளி என உறுதி செய்ததுடன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

சமீபத்தில் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, முகமது பைசலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முகமது பைசல் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 10 ஆண்டு சிறை தண்டனைக்கு கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் தகுதி நீக்கத்தை இன்று(மார்ச் 29) லோக்சபா செயலகம் ரத்து செய்தது.