ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில், மாநில மகளிர் ஆணையம் சார்பாக, மகளிர் மேம்பாடு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி, மிட்டப்பள்ளி பஞ்., தலைவர் சின்னத்தாய், ஹிந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உறுப்பினர் கலைவாணி, மகளிர் சுய உதவிக்குழு கவுரி, சித்ரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'மகளிர் வளர்ச்சி - நாட்டின் வளர்ச்சி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. 'மகளிர் மேம்பாட்டிற்கு கல்வி அவசியம்' என்ற தலைப்பில், வித்யா மந்திர் கல்லூரி பேராசிரியர் கவிதா பேசினார். 'மகளிர் பாதுகாப்பிற்கு அரசு, காவல்துறையின் செயல்பாடுகள்' என்ற தலைப்பில் ஊத்தங்கரை, மகளிர் ஸ்டேஷன் போலீஸ் எஸ்.ஐ., சுமதி பேசினார். இதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.