ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும், 6 ராகி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட இருப்பதாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறுதானியங்களில் முக்கிய பயிரான ராகி, அதிகளவில் பயிரிடப்படுவதை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நலனுக்காகவும், தமிழக முதல்வர் உத்தரவின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கடந்த ஜன., 1 முதல், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் மொத்தம், 6 ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் அரசாணை எண்; 144, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையில் தெரிவித்துள்ளபடி வரும், 31 முதல், 6 கொள்முதல் நிலையங்களும் மூடப்படுகின்றன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.