கரூர்: கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 14.18 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்களை, கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உதவி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
இதில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட, 10 நபர்களுக்கு தலா, 1.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி, 40 பேருக்கு தலா, 6,840 ரூபாய் மதிப்பில் 2.73 லட்சம் ரூபாய் செலவில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், அலிம்கோ திட்டத்தில் 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா, 23,765 ரூபாய் மதிப்பில், 95,060 ரூபாய் மதிப்பீட்டில் செயற்கைகால் உதவி, என, மொத்தம் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு, 14.18 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர்
பிரபுசங்கர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், சப் - கலெக்டர் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.