கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ல் ஓட்டு எண்ணிக்கை

Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.டில்லியில் நிருபர்களை சந்தித்த தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முதன்முறையாக வீட்டில் இருந்து
Karnataka Assembly elections will be held on 10th May; counting of votes on 13th Mayகர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ல் ஓட்டு எண்ணிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.


டில்லியில் நிருபர்களை சந்தித்த தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முதன்முறையாக வீட்டில் இருந்து ஓட்டுப்போடும் வசதி செய்யப்படும். 5.21 கோடி பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் - 2.62 கோடி, பெண்கள் - 2.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 9 .17 லட்சம் பேர் முதலில் ஓட்டுப்போட உள்ளனர். பெண்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்துள்ளனர். தேர்தலுக்கு 58 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.



latest tamil news


வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்.,13


கடைசி தேதி - ஏப்., 20


வேட்பு மனு பரிசீலனை - ஏப்.,21


வாபஸ் பெற கடைசி தேதி - ஏப்.,24


தேர்தல் நடக்கும் தேதி - மே 10(ஒரே கட்டமாக)


ஓட்டு எண்ணிக்கை - மே 13


அதே நாளில், ஒடிசா, உபி., மேகாலயா உள்ளிட்ட மாநிலங்காளில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-202319:42:23 IST Report Abuse
s. mohan என்ன நடக்குது இங்கே.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
29-மார்-202319:01:26 IST Report Abuse
Narayanan Muthu அப்பாடா மே பத்து வரைக்கும் காஸ், டீசல் பெட்ரோல் விலை ஏறாது. இது உறுதி. ஏன் எனில் காஸ், டீசல் பெட்ரோல் விலை தேர்தல் நன்னடத்தையின் கீழ் அறிவிக்கப்படாமல் சேர்க்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-மார்-202313:58:59 IST Report Abuse
Raj காலி இடம் என அறிவிக்கப்பட்ட வயநாட்டுக்கு ஏன் இடை தேர்தல் அறிவிக்கப்படவில்லை, பயம் வந்துடிச்சி தானே ....
Rate this:
enkeyem - sathy,இந்தியா
29-மார்-202315:04:04 IST Report Abuse
enkeyemஉங்க பப்பு பெரிய யோக்யவான் மாதிரி நான் சாவர்க்கர் அல்ல. காந்தி. மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று மார்தட்டியவன் சாவர்க்கரின் பேரன் ராகுல் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன் என்று அறிவித்தவுடன் தன்னுடைய அனைத்து ட்வீட்களையும் அழித்தது ஏனோ? பயம் தானே. இப்போது அந்த தைரியம் எங்கே போயிற்று?...
Rate this:
enkeyem - sathy,இந்தியா
29-மார்-202315:12:27 IST Report Abuse
enkeyem""காலி இடம் என அறிவிக்கப்பட்ட வயநாட்டுக்கு ஏன் இடை தேர்தல் அறிவிக்கப்படவில்லை, பயம் வந்துடிச்சி தானே"" இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜிவ்குமார் அளித்த பதில்: ""பிப்ரவரி மாத நிலவரப்படி காலி என அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது வயநாடு தொகுதி காலி என இம்மாதம் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. இதனால், நாங்கள் அவசரம் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்""...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X