புதுக்கோட்டையில், காந்தி படத்திற்கு முன், தியானம் செய்வதற்காக, ஒரு நாள் விடுப்பு வேண்டும் என மின் வாரிய ஊழியர் ஒருவர் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை மின் வாரியத்தில், உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருபவர் ரகுநாதன், 50. நேற்று, அவரது உயர் அதிகாரியிடம், ஒரு நாள் விடுப்பு கேட்டு, விண்ணப்ப கடிதம் கொாடுத்தார்.
அந்த கடிதத்தில், 'வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து, பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மன அமைதியை வேண்டி, என் வீட்டிலேயே காந்தி படத்திற்கு முன் அமர்ந்து தியானம் செய்ய உள்ளேன். ஒரு நாள் விடுப்பு வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.
அந்த கடிதத்தை படித்துப் பார்த்த மின்வாரிய அதிகாரி, 'இது போன்ற காரணத்துக்கு விடுப்பு கொடுப்பதற்கு, வாரிய சட்ட விதிமுறையில் இடமில்லை' என்று கூறி, அவருக்கு விடுப்பு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.