உடுமலை: உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள, சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பழைய சிதிலமடைந்து மேற்கூரைகள் இடிந்த நிலையில் அங்கன்வாடி கட்டடம் உள்ளது. புதிய அங்கன்வாடியின் அருகில் இந்த கட்டடமும் உள்ளது.
அதே வளாகத்தில்தான் வகுப்பறைகளும் உள்ளன. இடிந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி கட்டடம், மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகளை எந்த நேரமும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கவனிக்க முடியாது. எதிர்பாராதவிதமாக சிதிலமடைந்த கட்டடத்தினால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக இந்த பயன்பாடில்லாத கட்டடத்தை அகற்ற வேண்டும்,' என்றனர்.