திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சி மருதவல்லிபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பழையனுார் ஓடை கால்வாய் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக, கால்நடை மேய்ப்பவர்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பெண் சடலம் இருப்பதை கண்டனர். இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் விசாரித்தனர்.
அப்போது அது மணவூர் சாலையில் அடுப்புக் கரி சூளை அமைத்து அதை விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெகதீஸ்வரி, 40, என, தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஜெகதீஸ்வரியின் மரணம் குறித்து, கணவர் ராஜாவிடம் விசாரிக்கின்றனர்.