வால்பாறை :'தினமலர்' செய்தி எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆறு. நகரில் இருந்த, 3 கி.மீ., தொலைவில் உள்ள இந்த ஆற்றில் குளிக்க, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
வால்பாறை நகரில் இருந்து, சிறுகுன்றா செல்லும் வழித்தடத்தில், ரோட்டோரத்தில் இரும்பு தடுப்பு அமைக்காததால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டில், இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர். விரைவாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சுற்றுலா பயணியர் பாராட்டினர்.