திருவாலங்காடு:மணவூர் அடுத்த, எல்.வி.புரம், கொசஸ்தலையாற்றில், 'டூ - -வீலரில்' கோணிப்பையில் மணல் அடைத்து திருடப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த வழியாக போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ டூ- - வீலரில்' இரண்டு கோணிப்பையுடன் வந்த நபரை போலீசார் விசாரணைக்காக நிறுத்தினர்.
அவர் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதையடுத்து வாகனத்தில் இருந்த கோணிப்பையை ஆய்வு செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, மணலுடன் 'டூ - வீலரை' பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.