திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், பீரகுப்பம், புச்சிரெட்டிப்பள்ளி, வீரகநல்லுார், பெரியகடம்பூர் உட்பட 11 ஊராட்சிகளில், 2020- - 21, 2021- -22ம் ஆண்டிற்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை நடத்தப்பட உள்ளது.
இந்த சமூக தணிக்கைக்காக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து வட்டார வளமைய பயிற்றுனர்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள்,, சமூக தணிக்கை குறித்து கிராம ஊராட்சி தணிக்கையாளர்களுக்கு எவ்வாறு சமூக தணிக்கை நடத்துவது குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில், 50க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி தணிக்கையாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக பயிற்சியை, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவினா ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர்.