உடுமலை: உடுமலை அருகே, பயணிகளுக்காக நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பழநி ரோட்டில் வெஞ்சமடையில், சமீபத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது அங்கிருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிவடைந்தும், அங்கு நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், பஸ் ஏற வரும் பயணிகள், நிழற்கூரையின்றி வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மழை காலத்திலும் இதே சிரமத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டியதுள்ளது.
எனவே, பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி, உடனடியாக புதிதாக நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.