கூடலுார்: கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது.
கமிஷனர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் உஸ்மான்: நகராட்சி தலைவர் சக கவுன்சிலரை அடித்ததாக, 'வீடியோ' வெளியானது. அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
தலைவர்: தீர்மானங்கள் வாசித்த பின் மற்ற பிரச்னைகள் குறித்து பேசலாம் என்றார்.
அதனை ஏற்க மறுத்த உஸ்மான், தலைவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, தலை வருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் சிலர், உஸ்மானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அனைவரும் அமர்ந்தனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.