செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022- - 23ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 31ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
இதில், கூட்டுறவுத் துறை, உணவுப் பாதுகாப்பு துறை, பொது சுகாதாரம், மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தினர், இலவச சட்ட ஆலோசனை மையம் மூலம், கண்காட்சி அரங்குகள் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இதில், நுகர்வோர் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.