குன்னுார்: குன்னுார் 'ட்ரூக்' குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குனனுார் காட்டேரி கிளண்டேல் பகுதியில் முகாமிட்ட, 3 காட்டு யானைகள் தற்போது 'ட்ரூக்' டான்டீ குடியிருப்பு பகுதிக்கு சென்றன. அங்குள்ள வாழை மரங்களைஉட்கொண்டு வருகின்றன.
இப்பகுதியில் வீடுகளில் கழிப்பிட வசதியை உலிக்கல் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்காததால், தற்போதும் வனப்பகுதிகளுக்கு செல்லும் மக்கள், யானைகள் முகாமிட்டுள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.