கோத்தகிரி: கோத்தகிரி குஞ்சப்பனை புது தோட்டம் இருளர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ, 66. இவரது வீட்டருகே, காபி, தேயிலை மற்றும் குறுமிளகு பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது தலையில் காயம் அடைந்த நிலையில், இறந்து கிடந்துள்ளார். கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட எஸ்.பி., பிரபாகர் முன்னிலையில் தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இவரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.