குன்னுார்: குன்னுார் நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடந்தது.
துணை தலைவர் வாசிம் ராஜா: மின்வாரியத்துக்கு நிலுவை தொகை, 2.98 கோடி செலுத்தப்பட்டதுடன், ஓராண்டில் 16.21 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
கவுன்சிலர் தாஸ்:
வளர்ச்சி பணிகள் செய்யும் இடம் தனது வார்டுக்கு சொந்தமானது என அ.தி.மு.க., கவுன்சிலர் போலீசில் புகார் கொடுக்கிறார்.
அ.தி.மு.க., கவுன்சிலர் உமாராணி: அந்த இடம் எனது வார்டுக்கு உட்பட்டது. பணிகள் நடக்கும் போது என்னிடம் தெரிவிப்பதில்லை. ஒருமையில் பேசிய கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் ராமசாமி, மணிகண்டன், துணை தலைவர் வாசிம் ராஜா:
அ.தி.மு.க., ஆட்சியில் கடைகளின் வாடகை அதிகரித்தது என கூறியதுடன், சட்டசபையில், பழனிசாமி குறித்து பன்னீர்செல்வம் பேசியதை கிண்டலாக கூறினர்.
அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ரங்கராஜன், உமாராணி, லாவண்யா, ராஜ்குமார் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து அடிப்படை பணிகள் குறித்து சில கவுன்சிலர்கள் பேசினர்.
கமிஷனர்: இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.