கூடலுார்: மசினகுடி அருகே உள்ள ஆனைகட்டி 'மாசி கரியபண்ட்' அய்யன் கோவில் திருவிழா, 26ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு குண்டத்துக்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி; பகல், 12:00 மணிக்கு சிறியூர் மாரியம்மன் அழைப்பு; பிற்பகல், 2.30 மணிக்கு கொங்காளி அய்யனை அழைத்து வரும் நிகழ்ச்சி; மாலை, 3:00 மணி முதல் 4:00 மணி முடிவெடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு, 7:00 மணி முதல் அய்யன் புலி மேல் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, நேற்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.