வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ஆங்கிய செய்தி ஏற்பாடு செய்தியிருந்த நிகழ்ச்சியில் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி,
மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
![]()
|
இதையெல்லாம் ஒருபோதும் பா.ஜ., பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பா.ஜ. "தவறாகப் பயன்படுத்துகிறது" என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு , ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் பா.ஜ. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை பொதுவில் வைத்து அகந்தையுடன் ராகுல் கிழித்து எறிந்தார்.
வரப்போகும் 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.