காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம், முருகன் கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட எஸ்.பி., சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர். இந்த விருந்தில் வடை பாயாசத்துடன் உணவு பரிமாரப்பட்டது.
ஜாதி பாகுபாடின்றி அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த விருந்து முக்கிய கோவில் ஒன்றில் நடத்தப்படும். நேற்று, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்தது.
இந்த விருந்தில், பொதுமக்களுடன், கலெக்டர் ஆர்த்தி, எஸ்.பி., சுதாகர் மற்றும் வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பங்கேற்றனர். மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பிகாஷ்வேல், தாசில்தார் காஞ்சன மாலா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.