படப்பை:படப்பை அருகே திருமண ஏற்பாடு செய்யப்பட்ட 16 வயது சிறுமியை குழந்தைகள் நல அலுவலர்கள் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே கரசங்கால் ஊராட்சி, சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வடிவேல்.
இவர், தன்னுடைய 16 வயது மகளுக்கு, அதிக வயதுடை நபருக்கு திருமணம் செய்ய வடிவேல் திட்டமிட்டு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். இதை அறிந்த அந்த சிறுமி, 'சைல்ட் ஹெல்ப் லைன்' எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகள், மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமியை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில், நேற்று ஒப்படைத்தனர்.
மேலும், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் குழந்தை நல அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.