புதுடில்லி,:'அரசியலையும், மதத்தையும் பிரித்து விட்டால், அரசியலில் மதம் குறித்து அரசியல்வாதிகள் பேசுவதை நிறுத்திவிட்டால், வெறுப்பு பேச்சுகள் குறைந்துவிடும்' என, உச்ச நீதிமன்றம் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.
வெறுப்பு பேச்சுகள் தொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம். தாமஸ், பி.வி. நாகரத்தினா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:
![]()
|
வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எத்தனை எத்தனை வழக்குகள் உள்ளன. இந்தப் பேச்சுகள் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகளவில் உள்ளன.
எத்தனை பேர் மீது தான் நடவடிக்கை எடுப்பது? இந்தப் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?
சக 'குடி'மகன் மீது, மற்ற சமூகத்தினர் மீது அவதுாறாகப் பேச மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏன் ஒவ்வொரு இந்தியரும் எடுத்துக் கொள்ளக் கூடாது?
ஒவ்வொரு நாளும் 'டிவி' விவாதங்கள், பொது நிகழ்ச்சிகளில், மற்ற சமூகத்தினர் குறித்து அவதுாறாக பலர் பேசி வருவதை பார்த்து வருகிறோம். இதற்கெல்லாம் எப்போது முடிவு ஏற்படும்?
இதுபோன்று உணர்வுப் பூர்வமாக துாண்டிவிடுவோரிடம் இருந்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அரசியலையும், மதத்தையும் பிரித்து விட்டால், அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்திவிட்டால், வெறுப்பு அரசியல் பிரச்னை மறைந்துவிடும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement