பழவேற்காடு, சென்னை காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 61. இவர், திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி, கடந்த ஆண்டு, ஜூலையில் ஓய்வு பெற்றார்.
ஓய்வூதியம் தொடர்பான பணப்பலன்கள் பெறுவதற்காக, பழவேற்காடு மருத்துவமனை கணக்கு பிரிவிற்கு சென்றபோது, அங்குள்ள உதவியாளர்கள் லோகேஷ், 40, மற்றும் ரமேஷ், 43 , ஆகியோர் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம், சங்கர் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, மருத்துவர் சங்கர் கொடுத்த, ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை ரமேஷ் வாங்கினார். மறைந்திருந்த போலீசார் ரமேஷை பிடித்து விசாரித்தனர்.
லோகேஷிற்காக லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து, லோகேஷையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.