மாங்காடு, மாங்காட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அவர்கள், காணிக்கையாக செலுத்தும் உண்டியல், இரு மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும். அதன்படி, நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.
பரம்பரை தர்மகர்த்தா மணலி.சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காணிக்கை எண்ணினர். அதில், 31.66 லட்சம் ரூபாய், 320 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி கிடைத்தன.