கீழ்ப்பாக்கம், 'செக்' மோசடி வழக்கில், உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சினிமா பைனான்சியர் போத்ராவிடம், 2002ல், உதயம் தியேட்டரின் அப்போதைய உரிமையாளராக இருந்த மணி, 64, ராஜிவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.
இதில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மணி கொடுத்துள்ளார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்தது.
இது தொடர்பாக, 2015ல் தொடரப்பட்ட வழக்கில், மணி உள்ளிட்டோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இருப்பினும் மணி கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், போத்ரா தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, கீழ்ப்பாக்கம் போலீசார், நேற்று முன்தினம் மணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.