கோடம்பாக்கம், சென்னையில், பூட்டிக் கிடக்கும் காவல் உதவி மையங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து ள்ளது.
சென்னையில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும், குறைந்தது நான்கு காவல் உதவி மையங்கள் உள்ளன. இதில், 'ஷிப்ட்' முறையில் போலீசார் பணியில் இருப்பர்.
அந்தந்த பகுதியில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து, மையத்தில் உள்ள போலீசார் கண்காணிக்க வேண்டும்.
அவசர உதவிக்கு காவல் நிலையங்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை, இந்த உதவி மையங்களால் தவிர்க்கப்பட்டது. மையத் தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய, புகாரை விசாரிக்க என, அந்தந்த பகுதி மக்களுக்கு போலீசார் உதவியாக இருந்தனர்.
தற்போது, பல்வேறு இடங்களில் இந்த காவல் உதவி மையங்கள் பூட்டப்பட்டு, காட்சிப் பொருளாக மாறி உள்ளன.
இதில், அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அசோக் நகர் 6வது அவென்யூவில் உள்ள காவல் உதவி மையம்.
மேலும், கே.கே., நகர் காவல் நிலைய எல்லையில், ராஜமன்னார் சாலை - முனுசாமி சாலை அருகே உள்ள காவல் உதவி மையம், கோயம்பேடு காவல் நிலைய எல்லையில் உள்ள மதுரவாயல் அமுதா நகர் காவல் உதவி மையம் ஆகியவை பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.