3ம் தேதி வரை பார்லி., ஒத்திவைப்பு

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
கடும் அமளிக்கு மத்தியில், மத்திய அரசு மசோதா ஒன்றை விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றிய நிலையில், வரும் 3ம் தேதி வரை லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.நேற்று பார்லி.,யின் இரு சபைகளும் கூடிய உடனேயே, வழக்கம் போல எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும், மத்திய அரசு அதிரடியாக மசோதாக்களை நிறைவேற்ற துவங்கியது. மொத்தம் மூன்று மசோதாக்களை நிறைவேற்ற
Barley till 3rd., adjournment   3ம் தேதி வரை பார்லி., ஒத்திவைப்பு

கடும் அமளிக்கு மத்தியில், மத்திய அரசு மசோதா ஒன்றை விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றிய நிலையில், வரும் 3ம் தேதி வரை லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நேற்று பார்லி.,யின் இரு சபைகளும் கூடிய உடனேயே, வழக்கம் போல எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், மத்திய அரசு அதிரடியாக மசோதாக்களை நிறைவேற்ற துவங்கியது. மொத்தம் மூன்று மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், முதலாவதாக, 'சந்தை போட்டி திருத்த மசோதா 2022' விவாதங்கள் ஏதுமின்றி அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


அடுத்து, வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாவது மசோதா எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த அலுவல்கள் முடிந்ததும், அமளி காரணமாக, லோக்சபா 3ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் ஜே.பி.சி., விசாரணை கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடத்திய தொடர் அமளியால் இதுவும் 3ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, காங்., திட்டமிட்டுள்ளது. இதற்கான வடிவத்தை, காங்., மூத்த எம்.பி., மணிஷ் திவாரி இறுதி செய்து விட்டார்.

ஆனால், காங்.,கின் இந்த முடிவுக்கு, பல எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டதால் இழுபறி நீடிக்கிறது.

அப்படியே தீர்மானம் தரப்பட்டாலும், 14 நாட்கள் கழித்து தான் அலுவல் குறிப்பேட்டில் பட்டியலிட எடுத்துக் கொள்ளப்படும். தற்போது மொத்தமே நான்கு அலுவல் நாட்கள்தான் பாக்கி உள்ளதால், இந்த கூட்டத்தொடருடன் இந்த நோட்டீசின் ஆயுளும் காலாவதி ஆகிவிடும்.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

30-மார்-202312:17:02 IST Report Abuse
அப்புசாமி பார்லிமெண்ட்டை ஒத்திவெச்ச நேரத்தில் கேண்ட்டீனையும் மூடிறனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X