வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மின் வாரியத்தில் நேற்று முன்தினம் மட்டும், 45 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில், 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், கட்சி மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று முன்தினம், 15 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு சார்பில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் பேரணி நடந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
![]()
|
வேலைக்கு வராதவர் விபரம் தருமாறும், அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யுமாறும், பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கணக்கெடுத்ததில், நேற்று முன்தினம் மட்டும் 45 ஆயிரம் பேர் வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
விடுப்பை பயன்படுத்தினால் தப்பா?
வேலை நிறுத்த போராட்டம் நடத்தினால் தான் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊழியரும், தனக்கு உள்ள விடுப்பை எடுத்து தான் பேரணியில் பங்கேற்றனர். எனவே, சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது.
-தொழிற்சங்க நிர்வாகிகள்