சென்னை : தென் மாநில பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், பல இடங்களில், 2ம் தேதி வரை மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரியில், 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.