விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையத்தில் தனியார் கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ரவி நாளை(மார்ச் 31) ராஜபாளையம் வருகிறார்.
ஏப்.1 காலை 8:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், காலை 11:00 மணிக்கு ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாலை 4:00 மணிக்கு சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்று மாணவர்களிடம் பேசுகிறார்.