சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தலுக்கும், பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தடை கோரி, எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். தடை கோரிய மனுக்களை நிராகரித்து, உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நால்வரும், மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மட்டும், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இன்றி, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மற்ற மூவரது மனுக்களுக்கும் எண் வழங்கப்பட்டால், அவையும் சேர்த்து, இன்று விசாரணைக்காக பட்டியலிடப்படும்.