வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆவின் தயிர் பாக்கெட்டில், 'தஹி' என்ற ஹிந்தி வார்த்தையை அச்சிடும்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தி உள்ளதற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்க சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.

குழந்தையை கிள்ளிவிட்டு, சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.