வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ''நடப்பு நிதியாண்டில், 12 ஆயிரத்து 200 கி.மீ., தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டில், ஜனவரி 31ம் தேதி வரை, 6,803 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நாளைக்கு, 22.2 கி.மீ., என்ற அளவில் தான் சாலை அமைக்கப்படுகிறது. இது, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் ஒரு நாளில் கட்டமைக்கப்பட்ட மிகக் குறைவான துாரம் ஆகும்.

அதிகபட்சமாக, 2020 - 21ம் நிதியாண்டில், 13 ஆயிரத்து 327 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டன. அதாவது, ஒரு நாளுக்கு, 36.5 கி.மீ., துாரம் என்ற அளவில் கட்டமைக்கப்பட்டன.