நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ., முடிவு

Updated : மார் 30, 2023 | Added : மார் 30, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
மாநில அளவில் சரியாக செயல்படாத 14 தென்மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ., மாநில தலைமை முடிவெடுத்துள்ளது.2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது கணிசமான வெற்றியை பெற மாநில பா.ஜ., தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக பல தீவிரமான நடவடிக்கைகளை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். கூட்டணியைப் பற்றி பொருட்படுத்தாமல், பலமான தொகுதிகளில் எம்.பி.,க்களை பெற்று தனது
BJP decides to weed out administrators   நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ., முடிவு


மாநில அளவில் சரியாக செயல்படாத 14 தென்மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ., மாநில தலைமை முடிவெடுத்துள்ளது.

2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது கணிசமான வெற்றியை பெற மாநில பா.ஜ., தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக பல தீவிரமான நடவடிக்கைகளை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். கூட்டணியைப் பற்றி பொருட்படுத்தாமல், பலமான தொகுதிகளில் எம்.பி.,க்களை பெற்று தனது சக்தியை காட்டிவிட வேண்டும் என விரும்புகிறார்.


latest tamil news


இதற்கான நடவடிக்கையில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தார். தற்போது மேலும் சில மாவட்டங்களில் களையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். தென்மாவட்டங்கள் பலவற்றில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியில்லை என தலைமை கருதுகிறது. ஏப்.,14ல் நடைபயணம் துவங்கப்போவதாக அறிவித்தவர், அதை நடைமுறைப்படுத்தும் முன் பல மாற்றங்களை நிகழ்த்த உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பூத் அளவில் கட்டமைப்பு வலுவாக இருந்தால்தான் தி.மு.க., போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்பதால் இந்த மாற்றத்திற்கு தலைமை யோசித்துள்ளது. பல மாவட்டங்களில் பூத்கமிட்டிகளில் ஆட்களை இன்னும் அமைக்காமல் உள்ளனர்.

சில மாவட்டங்களில் அணிகள், பிரிவுகளின் நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அவர்களின் செயல்பாடுகளை கவனிக்காமல் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை மந்தமாக உள்ள பகுதிகள், கட்சிக்கு புதியவர்களை கொண்டு வராதவர்கள் என நிர்வாகிகள் மீது அதிருப்தி நிலவுகிறது. மேலும் தென்மாவட்ட மாநில நிர்வாகிகள் சிலர் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் தலைமை கருதுகிறது.

எனவே இப்போதே அதை சரிசெய்ய மாநில தலைமை முடிவெடுத்து தென்பகுதியில் 14 மாவட்டங்களில் நிர்வாகிகளை களையெடுக்க முடிவெடுத்துள்ளதாக கட்சியினர் பரபரப்பில் உள்ளனர்.

நமது நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
30-மார்-202314:00:18 IST Report Abuse
Raj இருக்கிற நாலுபேரையும் அனுப்பிவிட்டு கட்சியை கலைத்துவிட போக்கிரிறிர்களா?
Rate this:
KV Pillai - Chennai,இந்தியா
30-மார்-202315:48:33 IST Report Abuse
KV Pillaiநான்கு பேர் என்று மிகைப் படுத்தி சொல்லி விட்டீர்கள்....
Rate this:
Cancel
30-மார்-202312:06:32 IST Report Abuse
அப்புசாமி பாஸ், 10 இடங்களில் ஜெயிக்கிறது இருக்கட்டும், கூட்டணிக் கட்சிகளிடம் 10 இடம் கேட்டு வாங்குனாலே பெரிய வெற்றிதான். அதுவரைக்கும் தாங்குவீங்களா? கர்னாடகா எலக்ஷன் வரை தாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel
30-மார்-202311:01:47 IST Report Abuse
தமிழ் கட்சியில் இருப்பதே கொஞ்சம் பேர்தான். அவங்களையும் கலையெடுக்கிறேன் நுரைஎடுக்கிறேன்னு சொல்லி கட்சியைவிட்டு நீக்கினா அப்புறம் கட்சியே இருக்காது.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-மார்-202316:51:31 IST Report Abuse
கல்யாணராமன் சு.அண்ணே அது அவங்க பிரச்சினை ........... அவங்க பாத்துக்குவாங்க .... நீங்க ஏன் போட்டு உழப்பிக்கிறீங்க ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X