வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''நுாறு ஆண்டுகள் வாழ்ந்து, உதயநிதி மகனுடன் இணைந்து பணியாற்றுவேன்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர், ''என்னை புதைக்கும் சமாதியில், கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என, ஒரு வரி எழுதினால் போதும்,'' என்றார். குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் கடந்து வாழ்வீர்கள்,'' என்றார்.
துரைமுருகன் தொடர்ந்து பேசியதாவது: நானும், முதல்வரும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றோம். அப்போது கவர்னர், என் வயது குறித்து கேட்டார். அதற்கு முதல்வர், 'என் அப்பாவுடன் 53 ஆண்டுகள் கூடவே இருந்தவர்' என, என்னை பற்றி கூறினார்.

அப்போது, உதயநிதி அந்த பக்கம் அமர்ந்திருந்தார். நான் கவர்னரிடம், 'உதயநிதிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவருடன் நான்தான் இருப்பேன்' என்றேன். 'உங்களுடைய வயது என்ன?' என்று கவர்னர் கேட்டார். நான் உறுதியாக 100 வயதை கடப்பேன் என்று கூறினேன்.
'என்றைக்கும் வயது ஆகி விட்டது என நினைக்கக் கூடாது. இளமையாக இருக்க வேண்டும்' என கருணாநிதி சொல்வார். எனவே, நான் 100 வயது வரை நிச்சயமாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.