தாவணகெரே-கள்ளக்காதலை கண்டித்த, கணவரை கொன்ற மனைவியும், கள்ளக் காதலனும் கைது செய்யப்படடனர்.
ஹாவேரி மாவட்டம் ஹனகல்லை சேர்ந்தவர் மகாந்தேஷ், 35. இவரது மனைவி சுவேதா, 27. தாவணகெரேயில் வசித்தனர்.
கடந்த 23 ம் தேதி, தாவணகெரே வெளிவட்ட சாலையில், தலைநசுங்கிய நிலையில், மகாந்தேஷ் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. வித்யாநகர் போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் மகாந்தேசை கொன்றதாக, மனைவி சுவேதா, கள்ள க் காதலன் சந்திரசேகர், 28 ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால், மகாந்தேஷ் கண்ணில் மிளகாய் பொடி துாவி, அவரை கத்தியால் குத்தியும், தலையில் கல்லை போட்டும் சந்திரசேகர் கொன்றதும், இதற்கு சுவேதா உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
தாவணகெரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.