சென்னை: கடந்த 2022ம் ஆண்டில் 'இ-டிக்கெட்' முறைகேடு தொடர்பாக, ரயில்வேயில் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது, 82 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இ - டிக்கெட் முறைகேடு தொடர்பாக, 2022ல் நாடு முழுதும் மொத்தம் 4,430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி, மொத்தமுள்ள 15 ரயில்வே மண்டலங்கள் வாரியாக பட்டியல் வெளியிட்டு உள்ளது.
இதில், அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில்-633; மேற்கு-608; மத்திய கிழக்கு-514; தெற்கு ரயில்வே-392; தெற்கு மத்திய ரயில்வேயில்-350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.