சென்னை: தமிழக அரசு, கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்து, அந்தாண்டில் உத்தரவிட்டது.
இதற்கான நிபந்தனைகளின் கீழ் தேர்வான, 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது.
அதன்படி, 2021 - 22ல், 1,215 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வழங்க முடிவானது. அதில், 2022 அக்டோபரில், 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 1,000 கோடி ரூபாயை விடுவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.