சென்னை: கோவை, மடத்துக்குளத்தில் காதி கிளை வைப்பது தொடர்பாக விவாதம் நடந்தபோது, அமைச்சர் ராஜகண்ணப்பன், ''மடத்துகுளம் என்பது பேரூராட்சி. கிராம தொழில் வாரியம் சார்பில், காதி பொருட்கள் மற்றும் பனை பொருட்கள் விற்க, விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்கு, விற்பனை நிலையம் அமைக்க உரிமை வழங்கப்படுகிறது.
''இதற்கு வைப்புத் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பொருட்கள் விற்பதன் வழியே, மாதம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதற்கு உறுப்பினர் ஏற்பாடு செய்தால், உடனடியாக உரிமம் வழங்கப்படும்.
''அனைத்து ரேஷன் கடைகளிலும், கதர் பொருட்கள் விற்க, ஏற்பாடு நடந்து வருகிறது. கதர், பட்டு, தேன், கருப்பட்டி எனப் பல்வேறு பொருட்கள் விற்க ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்று கூறினார்.