சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
நேற்று காலை 10:02 மணிக்கு, அவர் சட்டசபைக்கு வந்தார். அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் சபையில் இருந்தனர். காலை 10:28 மணிக்கு, முதல்வர் சபைக்கு வந்தார். அப்போது, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி முதல்வரை வரவேற்றனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் பேசத் துவங்கும்போது, பழனிசாமிக்கு புகழாரம் சூட்டினர்.