சென்னை: ராமநவமி தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'ராமர்' என்றாலே 'ஆனந்தமானவர்; ஆனந்தம் தருபவர்' . தான் துன்பப்பட்டாலும் பிறர்நலனில் அக்கறை கொள்பவர் என்கிறார் மஹாபெரியவர். தர்மத்தை உபதேசிப்பது ராமாயணம். இன்று (மார்ச் 30) ஸ்ரீராம நவமி தினம்.
இதனை முன்னிட்டு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ராம நவமி திருநாளான இன்று, பகவான் ஶ்ரீராமரின் தெய்வீக அருளால், அனைவரின் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும், தீமைக்கு எதிரான நேர்மை மற்றும் நல்லொழுக்கம் வெல்லவும் தமிழக பாஜ., சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் வெளியிட்ட அறிக்கை; நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின நல்வாழ்த்துகள். இந்த மங்களகரமான தினத்தில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், செழுமையும் கிடைக்கட்டும் எனக் கூறியுள்ளார்.