சேலம்; பொருளாதார குற்றப்பிரிவை கண்டித்து, 'வின் ஸ்டார்' உரிமையாளரால் பாதிக்கப்பட்டோர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட இ.கம்யூ., நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பில், சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கட்சி மாநில துணை செயலர்
பெரியசாமி பேசினார்.
அதில், 3,500க்கும்
மேற்பட்டோரிடம் பணமோசடி செய்த, 'வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்' சிவக்குமார், அவரது, 36 மேலாளர்களை கைது செய்ய வேண்டும்; சிவக்குமாருக்கு ஆதரவாக செயல்படும், சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கட்சி மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.