ஏற்காடு: ஏற்காட்டில் படகுகள் பராமரிப்பு பணி நடக்கிறது.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை என்பதால், ஏற்காட்டில் கோடை விழா நடக்கும். அதனால், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக, தமிழக சுற்றுலா துறை மூலம் இயங்கும் படகு இல்லம். அங்கு மோட்டார், துடுப்பு படகுகள், இருவர், நான்கு பேர், தானாக ஓட்டிச்செல்லும் பெடல் படகுகள் உள்ளன.
கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு கோடை கால தொடக்கத்திலேயே, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா
பயணியரை மகிழ்விக்க, அங்குள்ள படகுகளை சீரமைத்து வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும் படகு இல்ல வளாகத்தில் சிறு வகை
சிற்றுண்டி, குழந்தைகள்
விளையாட ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.