நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் மன்ற நிறைவு விழா கூட்டம், நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''பல்லுயிர் தன்மை, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பது அவசியம்; இயற்கையோடு இணைந்து, சூழ்நிலைக்கேற்ப வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,'' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். விலங்கியல் துறைத்தலைவர் ராஜசேகர பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கல்லுாரியின் செயல்பாடுகள், தமிழக அரசு செயல்படுத்தியுள்ள, 'நான் முதல்வன் திட்டம்' 'மென்பொருள் திட்டம்' மற்றும் 'புதுமைப்பெண் திட்டம்' போன்ற நலத்திட்டங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தாவரவியல் துறை இணை பேராசிரியர் வசந்தாமணி வாழ்த்தி பேசினார். பட்டுப்புழு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன், பட்டுப்புழு வளர்ப்பு பற்றியும், அது சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.