ஈரோடு: ஈரோடு பகுதி மஞ்சள் மார்க்கெட் ஏல விற்பனைக்கு ஏப்., 1 முதல், 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இதன்படி ஏப்., 1, 2 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையாகும். பண்டிகைக்காக வரும், 3 முதல், 7 வரை மார்க்கெட் ஏல விற்பனைக்கு விடுமுறை அளித்துள்ளனர். அடுத்த, 8, 9 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறாக வருவதால் வழக்கமான விடுமுறையாகும். எனவே ஒன்பது நாட்களுக்குப்பின், ஏப்., 10 முதல் மஞ்சள் ஏல விற்பனை மீண்டும்
வழக்கம்போல நடக்கும்.