காங்கேயம்: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், ரூ.24 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு
விற்பனை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், தாராபுரம், மூலனுார், கரூர், சென்னிமலை, அப்பியம்பட்டி, காங்கேயம் பகுதி விவசாயிகள், 32 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முத்துார், காங்கேயம், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 83.65 ரூபாய், இரண்டாம் தரம், 60.60 ரூபாய், சராசரியாக, 78.49 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 24 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.