சென்னை: விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழுவை கலைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018 - 19 ல் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த குழுவானது, விருதுநகர் மாவட்ட நிறுவனத்திற்கு மேலாளர், விற்பனை மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட 25 பணியிடங்களை நிரப்பியது. இதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இதனடிப்படையில் நடந்த விசாரணையில் 25 பணியிடங்களுக்கு நடந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, மாவட்ட நிர்வாக குழுவும் கலைக்கப்பட்டு உள்ளது.